கோயில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி... "ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் கோயில் அழிக்கப்பட்டிருக்கலாம்": தொல்லியல் துறை
வாரணாசியில், இந்து கோயில் இருந்த இடத்தில் தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கில், மசூதி உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறு தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தில் கடந்த மாதம் சமர்பிக்கப்பட்டிருந்த ஆய்வறிக்கை, இருதரப்பினருக்கும் வழங்கப்பட்டது.
மசூதி இருந்த இடத்தில் மிகப்பெரிய இந்து கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னர் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் அது அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மசூதியின் மேற்கு சுவரே கோயிலின் ஒரு பகுதி தான் எனவும், தேவநாகரி, தெலுங்கு மற்றும் கனட மொழியில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் மசூதி தூண்களில் தென்பட்டதாகவும் ஆய்வறிக்கையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Comments